மார்த்தாண்டம் அருகே விரிகோட்டில் மனைவியை கேலி செய்ததை தட்டிக் கேட்ட கணவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜன். இவரது மனைவி புஷ்பலதாவை கடந்த 2014 ஆம் ஆண்டு ரெஜி என்பவர் கேலி செய்துள்ளார். இதை தட்டிக் கேட்ட கணவர் ராஜனை, ரெஜி தனது சகோதரர் மற்றும் மனைவியும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜனை கொலை செய்த குற்றத்திற்காக, குற்றவாளிகள் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
Discussion about this post