எதிர்க்கட்சிக்கான பணியை செய்ய காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெய்ப்பூர், நவாடா, காஸியாபாத், ஹஸாரிபாத், மேற்கு அருணாச்சல் ஆகிய 5 மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி டெல்லியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஊழல் மற்றும் நல்ல அரசை வழங்க தவறியது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் காங்கிரஸை வெளியேற்றியதாகக் கூறினார். கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளின் உண்மை வெளியாகியுள்ளதாக அவர் சாடினார்.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக, திறமையான காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது உழைப்பை தியாகம் செய்வதாக பிரதமர் குறிப்பிட்டார். காங்கிரஸ் உறுப்பினர்களின் உழைப்பு ஒரு குடும்பத்துக்கு மட்டும் பலன் அளிப்பதை எண்ணி கவலை கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.
பாஜக-வின் தலைமைப் பதவிகள் உழைப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும், உறவின் அடிப்படையில் அல்ல எனவும் மோடி தெரிவித்தார்.
Discussion about this post