விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது .
வெப்பச் சலனம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வளவனூர், உளுந்தூர்பேட்டை, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் சராசரியாக 5சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வளவனூரில் 15சென்டி மீட்டர் மழையும் விழுப்புரத்தில் 10சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post