மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 199 கோடியே 23 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத மழையால் நீலகிரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ள தமிழக அரசு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகிறது. இந்தநிலையில், வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வீடுகளை இழந்த மக்களிடம் மனுக்களை பெற்றார்.
வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடுகள் விரைவில் கட்டித் தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, புடவை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 50 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 199 கோடியே 23 லட்சம் தேவைப்படுவதாக கூறினார்.
Discussion about this post