சென்னையில், திமுக பிரமுகரின் பெட்ரோல் பங்கில் பணி செய்து வந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தங்கள் மகனை பெட்ரோல் பங்க் அதிபரான திமுக பிரமுகர் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார் என, பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர், திமுக பிரமுகரான சைதை கிட்டுவின் மகன் கருணாகிட்டு என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காசாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் சிறுக, சிறுக 10 லட்சம் ரூபாயை கையாடல் செய்துவிட்டதாகவும், பணத்தை உடனடியாக திருப்பி செலுத்துமாறும் கூறி, பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர், அவரை 2 மாதங்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் பெட்ரோல் பங்க் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உதயகுமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் பங்க் நிர்வாகம், பொய்க்குற்றச்சாட்டை கூறி கடந்த 2 மாதங்களாக தங்கள் மகனை சித்ரவதை செய்ததாகவும், கட்டையால் அடித்துக்கொலை செய்திருக்கலாம் எனவும் உதயகுமாரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Discussion about this post