நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்க்களின் போதும் ஊடகங்கள், தனியார் நிறுவனங்கள் கருத்து கணிப்பை வெளியிடும். அந்த வகையில் டெல்லியில் உள்ள ஐ.பி.ஏ.சி என்ற நிறுவனம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யாரை பிரதமராக்க உள்ளனர் என்ற கோணத்தில் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் மோடிக்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக 11 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9.3 சதவீத பேரும், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு 7 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
Discussion about this post