தமிழக அரசால் நடத்தப்படும் நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 412 ஆக இருந்த நீட் தேர்வு பயிற்சி மையங்களின் எண்ணிக்கை 506 ஆக அதிகரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் 11 ஆம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையிலும், 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரம் முதல் பயிற்சி வகுப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post