விவசாயிகளையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர், மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முயன்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக கூறினார்.
Discussion about this post