நாகையில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இருவரது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அல் கொய்தா அமைப்பின் உதவியுடன் செயல்படும் வகாத் இஸ்லாம் அமைப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகத்தின் 4 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகையில் வசிக்கும் ஹாரிஸ் முஹம்மது மற்றும் அசன்அலி ஆகியோரது வீடுகளில் அதிரடியாக நுழைந்த தேசிய புலனாய்வு துறை குழுவினர், தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற சோதனையில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஹாரிஸ் முஹம்மது, அசன்அலி ஆகியோர் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதும், வெளிநாடுகளில் இவர்கள் மீது போலி பாஸ்போர்ட் வழக்குகள் இருப்பதும், முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சோதனையின்போது இருவரும் வீட்டில் இல்லை என்பதும், அவர்கள் தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post