நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜன சதாப்தி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த ஜன சதாப்தி ரயில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே வளைவில் திரும்பும் போது இன்ஜின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்துக்குள்ளானது. இதனை ரயில் ஓட்டுநர் உடனடியாக கவனித்து விட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இருந்த போதும் 10க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் கட்டைகள் உடைந்து சேதமானது. திருச்சி – சென்னை இடையிலான மெயின் லைன் வழித்தடத்தில் இந்த விபத்து நடந்து இருப்பதால் இவ்வழியே செல்லும் மயிலாடுதுறை – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் , மயிலாடுதுறை -திருச்சி பயணிகள் ரயில் தாமதமாக புறப்படும் என தெரிகிறது. இதனிடையே ஜன சதாப்தியில் வந்த பயணிகள் பேருந்து மூலம் குத்தாலம் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள ரயில்வே அதிகாரிகள் ரயில் எஞ்சினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post