தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி தொடங்கவிருப்பதால் தற்காலிகமாக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மநாகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதற்கட்டமாக 287 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளன. இதில் ஒரு பகுதியாக பழைய பேருந்து நிலையம் 53 கோடி ரூபாய் செலவில் 4 மாடி கட்டடங்களுடன், வணிக வளாகங்கள், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தபடவுள்ளது. இதனால் தற்காலிகமாக பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் எனவும் பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post