திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற இயக்குநர் சங்க தேர்தலில் பாரதிராஜா, தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் ஏற்படும் சங்கடங்களை தான் உணர்ந்துள்ளதாகவும், அதனால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்வு செய்ய வசதியாக ராஜினாமா செய்ய முன் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மூத்த இயக்குநராக சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் எதிர்காலத்திற்கும் தமது பணிகள் தொடரும் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Discussion about this post