ஈரோட்டில் பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞரை எச்சரித்து, போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர்.
முனிசிபல் சத்திரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற இளம்பெண்ணும் கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரின் பழக்கத்தில் ஜோதி 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், திருமணத்திற்கு பார்த்திபன் மறுத்ததால், ஜோதி அளித்த புகாரின் பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசியுள்ளனர். திருமணம் செய்யாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்ததையடுத்து பார்த்திபன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் முன்னிலையில் காவல் நிலையம் எதிரே உள்ள கோயிலில் மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
Discussion about this post