ஈரோடு அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் ஆற்று குடிநீர் தேவைக்காக மேல்நிலை மற்றும் தரை மட்ட தண்ணீர் தொட்டிகள் அமைத்து, சீரான குடிநீர் வழங்கி வருவதால் தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட எலத்தூர், செம்மாண்டபதி, செட்டிபாளையம், தெற்குபதி உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நம்பியூர் தாலுக்கா முழுவதும் வறட்சியான பகுதி என்பதால் எலத்தூர் பேரூராட்சிகுட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் கூட்டுக்கூடிநீர் திட்டம்
மூலமாகவும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எலத்தூர் பேரூராட்சி சார்பில் காலை மாலை என இருநேரங்களிலும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், வறட்சி காலங்களில் கூடுதலாக பவானி ஆற்று நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எலத்தூர் பகுதியிலும் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளும், 32 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு தரைமட்ட தொட்டிகளும் அமைத்து கூடுதலாக ஆற்று நீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுபாடு இன்றி தினமும் 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் தொட்டிகளிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நாட்களிலும் குடிநீர் தட்டுபாடு இன்றி சீராக பவானி ஆற்று நீரை குடிநீராக வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post