தேர்தல் முடிவுக்கு பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் தவிர்த்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குறிப்பிட்ட சிலருடன் மட்டும் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரசின் படுமோசமான தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், அதனை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே தேர்தல் முடிவுக்கு பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் ராகுல் காந்தி தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் ராகுல் காந்தி பங்கேற்பது இல்லை.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் குறிப்பிட்ட சில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மட்டும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். பதவி விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post