வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
வரும் 23ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதையொட்டி தேர்தல் ஆணையம் முன்னேற்பாட்டுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
Discussion about this post