ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியைத் தொடரக் கூடாது என்றும் தகுதித் தேர்வெழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, 60 ஆயிரம் பேர் காத்திருப்பதாகவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Discussion about this post