முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், ஆயுள் தண்டனைக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்நீதிமன்றம், விடுதலை குறித்து தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரீசிலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. அத்துடன், மத்திய அரசின் கூடுதல் ஆவணங்களை உச்சநீதிமன்றம் விசாரணக்கு ஏற்றுக்கொண்டது என்றும் தெரிவித்தது.. இதனையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது…
Discussion about this post