இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது குடும்பத்தினருடன் நேற்று சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தார். அங்கிருந்து கார்மூலம் திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த அவர், இன்று காலை விஐபி தரிசனம் மூலம் தனது குடும்பத்தினருடன் பெருமாளை தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு ஸ்ரீ ரங்கநாயகி மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை அதிகாரிகள் வழங்கினர்.
Discussion about this post