முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இரு வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில், 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. 3வது நீதிபதியாக சத்தியநாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை, வரும் 27ஆம் தேதிவரை நடைபெறும் என்று நீதிபதி சத்திய நாராயணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தநிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது.
Discussion about this post