வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…
வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனின் அடையாளம். வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கிட, 18 வயதுக்கு மேற்பட்ட வாக்களர்கள் அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். வருகின்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்த, பேருந்து நிலையம், பூங்கா, ரயில் நிலையம் என பல்வேறு இடங்களில் உங்கள் ஓட்டு உங்கள் உரிமை, ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது போன்ற வாசங்கள் அடங்கிய விழிப்புணர்வு பாதைகைகள், எல்இடி திரை, பலூன் உள்ளிட்டவைகள் மூலம், தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதே போல, மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் பாரசூட்டில் பறப்பது, பேரணி நடத்துவது, நடைபயணம் உள்ளிட்டவைகள் மூலம், வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வாக்களர்கள் தங்களுக்கு எழும் பல்வேறு சந்தேகங்களை தீர்த்து கொள்ள 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். அதே சமயம், தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள, விவிபேட் என்ற எந்திரமும் இந்த முறை புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குபதிவு குறைவாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், 80 சதவீத்த்திற்கு மேல் வாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதாகவும் கூறுகிறார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.
வலிமையான ஜனநாயகத்தை உருவாக்க ஒவ்வொரும் தங்களது ஓட்டுகளை பதிவு செய்வது அவசியம் என்று கூறும் தலைமை தேர்தல் அதிகாரி, ஏப்ரல் 18 ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், 100-சதவீத வாக்கு பதிவு என்பது மக்களின் கையில் தான் உள்ளது.
Discussion about this post