விழுப்புரத்தில் தேர்தலில் வாக்களர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை தெரிந்துக்கொள்ளும் இயந்திரத்தை சோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஓரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளிலும் 26 லட்சத்து 65 ஆயிரத்து 928 வாக்காளர் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 234 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஏற்கனவே 8 ஆயிரத்து 119 வாக்கு செலுத்தும் இயந்திரமும், வாக்காளர்கள் ஒப்புகை சீட்டு பெறும் இயந்திரம் 4 ஆயிரத்து 378 இயந்திரங்கள் ஒதுக்கப்படிருந்தது. இந்நிலையில் புதிதாக 150 ஒப்புகை சீட்டு பெறும் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை விழுப்புரம் கோட்டாச்சியர் குமரவேல் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரிநிதிகள் முன்னிலையில் சோதனை செய்யும் பணி நடைபெற்றது.
Discussion about this post