தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தமிழக அரசின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 17 கோடி ரூபாயில் 5 ஆயிரத்து 319 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தில் தமிழக அரசின் சார்பில் கிராம சேவை மையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், கால்நடை மருந்தகங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட 12 புதிய கட்டிடங்களை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
விழாவில் பங்கேற்ற அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள், பெண்களுக்கான விலையில்லா தையல் இயந்திரங்கள், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள், திருமண நிதியுதவி உள்ளிட்ட 16 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை 5 ஆயிரத்து 319 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதையடுத்து விழாவில் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011ல் மக்களுக்காக சிந்தித்து செயல்படுத்திய திட்டங்களை தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொய்வின்றி செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post