பாமக முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்து இருப்பதாக, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் வரை ஓயமாட்டோம் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
திமுகவுடன் கூட்டணி வைக்காததாலும், தோல்வி பயத்தாலும் ஸ்டாலின் பாமக மீது அவதூறுகளை பரப்பி வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
Discussion about this post