டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 32வது கூட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை பொருத்தவரை நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. இதனிடையே ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 99 சதவிகித பொருட்கள் 18 சதவிகிதம் அல்லது அதற்கு குறைவான வரி விதிப்பிற்கு கொண்டுவரப்படும் என சமீபத்தில் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 32வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் டெல்லியில் தொடங்கி உள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post