அஜித் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள விஸ்வாசம் திரைப்படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டின் விநியோகஸ்தர் சாய்பாபா, பெற்றிருந்த கடன்பாக்கி 78 லட்சம் ரூபாயை திருப்பித் தராததால், இம்மாவட்டங்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி சினிமா பைனான்சியர் உமாபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை விதித்தது. இதனிடையே, கடன் பாக்கித் தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதித் தொகையை 4 வாரங்களுக்குள் வழங்குவதாகவும் நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தடையை நீக்கக் கோரியும் முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Discussion about this post