2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த துணை நிதி நிலை அறிக்கையில் மொத்தமாக ஆறாயிரத்து 431 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் கூறினார்.
மாநில போக்குவரத்துத் துறைக்கு மொத்தமாக தொள்ளாயிரத்து 98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல கஜா புயல் நிவாரணத்திற்காக இரண்டாயிரத்தி 298 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post