பொதுத்துறை வங்கிகள் இணைப்பதால் வேலையிழப்பு ஏற்படாது, என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார்.
விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அருண் ஜேட்லி, வங்கிகள் இணைக்கப்படுவதால், கடன் அளிக்கும் நடைமுறை செலவுகள் வெகுவாக குறையும் என்றார்.
பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிகள் வாராக்கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்ட அவர், அதை சரி செய்யவே வங்கிகள் இணைப்பு என கூறினார். திவால் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன் வசூலிக்கப்பட்டதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.
Discussion about this post