இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 128 பேர் காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் எரிமலை கடந்த டிசம்பர் 22-ம் தேதி வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையும், வெப்பமும் வெளியேறிது. எரிமலை வெடித்த அதிர்வினால் சுந்தா ஜலசந்தி பகுதியில் 65 அடி உயரத்தில் எழுந்த சுனாமி தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவினை தாக்கியது.அந்த ஆழிபேரலையால் பல வீடுகளும், கடைகளும் தரைமட்டமாகின. அதிலிருந்த மக்களும் பலத்த காயமடைந்தனர், சிலர் சுனாமி தாக்கிய போதே உயிரிழந்து விட்டனர். முதல் கட்ட மீட்பு பணியில் பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக இருந்தது, பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் வடிந்த பிறகு மீட்பு பணியை தொடங்கியதும் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன.
இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 128 பேரை காணவில்லை எனவும் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ,நேற்று மீண்டும் எரிமலை வெடித்த நிலையில் அங்குள்ள மக்கள் அனைவரும் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.எனவே மீண்டும் எரிமலை வெடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.
Discussion about this post