முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எடியூரப்பா பகல் கனவு காண்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இது காங்கிரசுக்குள் எதிர்ப்பை உண்டாக்கும் என்றும், காங்கிரஸ் – மதசார்ப்பற்ற ஜன தள கூட்டணியில் நடக்கும் மாற்றங்களை கவனித்து வருவதாகவும் பா.ஜ.க தலைவர் எடியூரப்பா கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, எப்படியாவது முதலமைச்சர் ஆகிவிடலாம் என எடியூரப்பா பகல் கனவு காண்பதாகவும், அது நடக்காது எனவும் விமர்சித்துள்ளார்.
Discussion about this post