மும்பை தீவிரவாத தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர், நவம்பர் 26-ம் தேதி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு இடங்களில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3 நாட்கள் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மும்பை கோர தாக்குதல் சம்பவத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பை நகரின் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post