கரூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை உடனடியாக கணக்கெடுக்க வேளாண் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் சாய்ந்தன, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மரங்களை விரைந்து அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும், சேதமடைந்த விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேளாண் துறை அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டுள்ளார்.
Discussion about this post