அந்தமானில் அடுத்தடுத்து 9 முறை நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்
அந்தமான் நிகோபர் தீவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திங்ககிழமை அதிகாலை 5.45 மணிக்கு பிறகு தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 5 ஆக பதிவானது. தொடர்ந்து 6.54 மணிக்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 மணி நேரத்தில் சுமார் 9 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்தமான் மக்கள் பீதியில் உள்ளனர்