கொரோனா பாதித்தவர்களில் 99.9 சதவிகிதம் பேருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படுவதில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், உள்நோயாளிகள் பிரிவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கவச உடை அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், கொரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸிலும் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜீவகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் 24 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இரண்டு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.