தமிழகத்தில் 97.54% பேருக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது – தயானந்த் கட்டாரியா, உணவுத்துறை செயலாளர்!

தமிழக அரசு இதுவரை 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளதாக உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தயானந்த் கட்டாரியா, தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாகவும், அவர்களில் 97 புள்ளி 54 சதவீதத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 75 புள்ளி 20 சதவீதம் பேருக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version