கேரளாவில் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த கார்த்தியாயினி பாட்டி. படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது 96-வது வயதில் 4-ம் வகுப்பு தேர்வெழுதினார்.
இதில் 100-க்கு 98 மதிப்பெண்களைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதற்கான சான்றிதழை மாநில முதலமைச்சர் பிணராயி விஜயனிடம் பெற உள்ளார்.
இந்நிலையில் கணினியை பயன்படுத்த கற்றுக்கொள்வதில் ஆர்வம் உள்ளதாக கார்த்தியாயினி பாட்டி தெரிவித்திருந்தார். இதனையடுத்து மாநில கல்வித்துறை அமைச்சர் ஏ.கே பாலன் பாட்டிக்கு இலவசமாக மடிக்கணியை பரிசளித்தது மட்டுமல்லாமல் கற்றும் கொடுத்தார்.
இந்த தருணம் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பாட்டி கார்த்தியாயினி தெரிவித்துள்ளார்.