சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்தது.
சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 200 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில், 94 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, கொரோனோ வைரசுக்கு, உலக சுகாதார அமைப்பு, கொவிட்-19(Covid-19) என பெயரிட்டுள்ளது. கொரோனா வைரஸின் பெயர் மற்றும் பாதிப்பை ஏற்படுத்திய ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கி இந்தப் புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.