ஊடரங்கு முடிந்த பின்னர் மீண்டும் அலுவலகம் வருவதற்கு 93 சதவீத ஊழியர்கள் அச்சமடைந்துள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி, மும்பை பெங்களூர், உள்ளிட்ட பெருநகரங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களை சார்ந்த 560 ஊழியர்கள் கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். இதில் 59 சதவீதம் பேர் உடல்நலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பதும் 25 சதவீதம் பேர் பொருளாதார நிலை குறித்து அச்சம் கொண்டிருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் பெருநிறுவனங்கள் சமூக நலனுக்காக செலவிடும் CSR நிதிபோல், ஊழியர்களின் ஆரோக்கியத்திற்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டுமென 99 சதவீத ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 81 சதவீத பணியாளர்கள் பேட்ஜ் வாரியாக பணிக்கு செல்லவிரும்புவதும், 73 சதவீதம் பேர் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிகளைத் தொடர விரும்புவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 85 சதவீத ஊழியர்கள் அலுவலகம் மீண்டும் திறப்பதற்கு முன்னர் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்,