91வது ஆஸ்கர் விருது: சிறந்த படமாக 'கிரீன் புக்' தேர்வு

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதினை பீட்டர் ஃபிரெலி இயக்கிய ‘கிரீன் புக்’ திரைப்படம் வென்றுள்ளது. 91வது ஆஸ்கர் விருதுகள் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. டால்பி அரங்கில் தொகுப்பாளர் இன்றி விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த படத்திற்கான விருதினை கிரீன் புக் வென்றது. சிறந்த இயக்குனராக ரோமா பட இயக்குனர் அல்போன்சோ குவாரன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகர் விருதினை ரமி மாலெக் பெற்றார்.

சிறந்த நடிகையாக, தி ஃபேவரட் திரைப்பட நாயகி ஒலிவியா கோல்மேன் வென்றார். போகிமியன் ராப்சோதி திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது. பிளாக் பாந்தர், ரோமா, கிரீன் புக் திரைப்படங்கள் தலா மூன்று விருதுகளை தட்டிச் சென்றன.

Exit mobile version