நியூயார்க்கில் 90 வயதான ஜப்பானிய பெண் கலைஞர் யோயோயி குசாமாவின் (Yoyoi Kusama) கண்காட்சியை காண ஏராளமானோர் திரண்டு வருகின்றனர்…
குளிரும், பனியும் பொழிந்த காலையில் தொடங்கிய அவருடைய கண்காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் 2 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர். பின்னர் உள்ளே நுழைந்தவர்கள் யோயோயி குசாமாவின் முகத்தை கண்டவுடன் காத்திருந்த வேதனையை மறந்து உற்சாகமடைந்தனர் . 90 வயதான ஜப்பானிய கலைஞர் பல்வேறு மாய ஜாலங்களால் கலையால் நிகழ்த்தியுள்ளார். இருட்டறையில் ஒளி விளக்குகளைப் பொருத்தி அவை சிவப்பு, வெள்ளை என பல்வேறு நிறங்களில் கண்ணாடி சுவர்களில் பிரதிபிம்பங்களை வெளியிட்டது, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சிறு வயதிலேயே ஜப்பானை விட்டு நியூயார்க்கில் குடியேறிய குசாமா தமது கலை கண்காட்சிகளால், மக்களின் மனதில் அழிக்க முடியாத முகமாக மாறியுள்ளார்..