ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 90% நிறைவு

ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 90% முடிவுற்ற நிலையில் குடிநீர் விநியோகத்திற்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.

ஈரோடு மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட்டு 60 வார்டுகளை கொண்டுள்ள நிலையில் அனைத்து பகுதி மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் 484 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, தண்ணீரை பிரித்து வழங்கும் வகையில் 2 ராட்சத தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் முதல்கட்டமாக 3 பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்க சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. இதன்பின் இந்த திட்டம் முதலமைச்சரால் தொடங்கி  வைக்கப்பட உள்ளது. இதன் மூலம், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட உள்ளது.

Exit mobile version