சோமாலியாவில் காரில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 90 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
சோமாலியத் தலைநகர் மொகாதிசுவில் ஒரு காவல் சோதனைச் சாவடியில் வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு வந்த கார் திடீரென வெடித்துச் சிதறியது. இந்தக் குண்டுவெடிப்பில் எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரியும் தீப்பிடித்தது. சக்தி வாய்ந்த இந்தக் குண்டுவெடிப்பில் அருகில் நின்ற வாகனங்களில் இருந்த மாணவர்கள், காவல் அதிகாரிகள் 17 பேர் உட்பட மொத்தம் 90 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இருபதுக்கு மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அல் காயிதா இயக்கத்தினர் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.