கடலூரில் குற்றங்களை தடுக்க 30 இடங்களில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக 30 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 90 சிசிடிவி கேமராக்களை வடக்கு மண்டல போலீஸ் ஐஜி துவக்கி வைத்தார்.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக 24 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து கடலூர் மாவட்ட காவல்துறை நிர்வாகம் சார்பில் 30 இடங்களில் 90 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. புதுப்பாளையம் சந்திப்பு, கடலூர் கிளை சிறைச்சாலை சந்திப்பு, மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தொடங்கி வைத்தார்.

Exit mobile version