அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட், 58 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் கேப் கெனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, 58 ஸ்டார்லிங் செயற்கைகோள்களை, வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. இந்த செயற்கைகோள்களுடன், பூமியை ஆய்வு செய்யும் மூன்று செயற்கை கோள்களும் அனுப்பப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக, ஸ்டார்லிங் செயற்கைகோள்களை அனுப்பியுள்ளது. செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப பயன்படுத்தும் ஃபால்கன் 9 ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறது. ஒரு வருடத்தில் 6 வது முறையாக ஃபால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்தி செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.