இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக படகுகளை தாக்கி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் கஞ்சா வைத்திருந்ததாக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை அந்நாட்டின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீண்டும் எல்லை தாண்ட கூடாது என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், எல்லை தாண்டிய படகுகளை நாட்டுடமையாக்குவோம் எனவும் எச்சரித்துள்ளது. இதனிடையே விடுதலையானவர்கள் எப்போது நாடு திரும்புவார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.