எதிர்க்கட்சி கூட்டணியில் 9 பேருக்கும் பிரதமராகும் ஆசை

எதிர்க்கட்சி கூட்டணியில் 9 பேர் பிரதமர் ஆகும் ஆசையில் இருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தின் மால்டாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார். மேற்கு வங்கத்தில் இருந்து திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்றும், ஜனநாயகத்தை மம்தா பானர்ஜி கொன்று விட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மோடிக்கு ஆதரவாக 100 கோடி மக்கள் உள்ளதால், 20 அல்லது 25 தலைவர்கள் ஒன்று சேர்ந்து அவரை வீழ்த்தி விட முடியாது என்று கூறிய அமித் ஷா, எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமராகும் ஆசையில் 9 பேர் இருப்பதாக குறிப்பிட்டார்.

Exit mobile version