இலங்கையில் 9 அமைச்சர்கள் திடீரென ராஜினாமா

இலங்கையில் 9 அமைச்சர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளதால், இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பிப்ரவரி மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உணவு விடுதிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 258க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சில முஸ்லிம் அமைச்சர்கள், தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், ரணில் விக்ரம சிங்கே அமைச்சரவையில் இருந்த மத்திய அமைச்சர்கள் 9 பேர் திடீர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த அவர்கள் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு தவறியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேர் ராஜினாமா செய்துள்ளதால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version