அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட சேலம் புறநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக, சேலம் புறநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் புறநகர் மாவட்ட மீனவர் பிரிவு முன்னாள் செயலாளர் ஏ.எல்.சுரேஷ், நரசிங்கபுரம் நகர கழக மாவட்ட பிரதிநிதி மீனா தியாகராஜன்,, நரசிங்கபுரம் நகர 11வது வார்டு கழக செயலாளர் ஏ.தியாகராஜன்,, விவசாயப் பிரிவு செயலாளர் சி.செல்லத்துரை, தங்காயூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பாலாஜி,, கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் கே.வேங்கையன், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கே.ஆனந்த், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ரூபன் கே.வேலவன், விளாத்திக்குளம் பேரூராட்சி புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் ஆர்.பொன்ராஜ் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version