கஜா புயலால் பாதிக்கப்பட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற சிறுநீரக பாதிப்பு தொடர்பான கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட பின் நியூஸ் ஜெ. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், புயல் பாதித்த மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புயல் பாதித்த மாவட்டங்களில் 16 ஆயிரத்து 856 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இதுவரை 9 புள்ளி 2 லட்சம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களை விட தற்பொழுது டெங்கு காய்ச்சல் 50 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் பன்றிக் காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.