இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 9 படகுகள் விடுவிப்பு

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 9 படகுகளுடன் மீட்புக்குழுவினர் ராமேஸ்வரம் திரும்பினர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2014 ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, தஞ்சை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 183 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்துள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க தமிழகத்தில் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2018 அக்டோபர் மாத இறுதியில் இந்திய படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 183படகுகளில் 50க்கும் குறைவான படகுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியானது. கடந்த 17ந்தேதி படகு மீட்புக் குழுவினர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 படகுகளை மீட்க இலங்கை சென்றனர். இவர்கள் காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு ராமேஸ்வரம் துறைமுகம் வந்து சேர்ந்தனர். இவர்களிடம் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். பின்னர் படகுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version